அருள்மிகு தோரணமலை முருகன் திருக்கோவில்

Primary Deity
முருகப்பெருமான்
Temple Type
Murugan Temples
Location
கிருஷ்ணகிரி
Contact Number
+91-Not Available

பொதிய மலைக்கு அடுத்தாற்போல், வடதிசையில் வெள்ளி மலையும், முள்ளி மலையும், திரிகூடமலை எனப்படும் குற்றால மலைக்கும் நடுவே தோரணமலை அமைந்துள்ளது. இம்மலையின் அமைப்பு மாலை போன்று உள்ளதால், தோரணமலை எனப் பெயர் பெற்றது. 'வாரணம்' என்றால் யானை. துதிக்கையை ஊன்றி யானை ஒன்று படுத்திருப்பதைப் போன்றே இம்மலை காட்சி அளிப்பதால், 'வாரண மலை' எனப் பெயர் பெற்று, நாளடைவில் 'தோரணமலை' என்றானது.

மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீ வல்லப விநாயகரை தரிசித்து ஆசி பெற்று பக்தர்கள் மலை ஏறிச் செல்கின்றனர். முருகன், லட்சுமி, சரஸ்வதி, கண்ணன் ஆகியோரின் சிலைகள் சுற்றிலும் காணப்படுகின்றன. மலையின் முக்கால் பகுதிக்கு படிக்கட்டுகள் வசதியாக அமைக்கப்பட்டுள்ளன. மீதி பகுதியை ஏறுவதற்கு கம்பிகள் நடப்பட்டுள்ளன. செங்குத்தாக இருப்பதால் கவனமாக ஏற வேண்டும். மூலஸ்தானத்தில் மூலவராக முருகப்பெருமான் சாத்வீக மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். கையில் வேலேந்தி, பாலமுருகனாக கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். மயில் வாகனம் உள்ளது. அகஸ்தியரின் சீடரான தேரையரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட முருகன் இவர். சந்தன அலங்காரத்தில் ஜொலிக்கின்றார். பக்தர்கள் தங்குவதற்கு மண்டபங்கள், குளியலறைகள், சமையலறைகள், வற்றாத கிணறு ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மலை மீது 64 வகையான சுனைகள் உள்ளன. அவற்றில் ஒரு பெரிய சுனை எப்போதும் வற்றாமல் இருப்பதோடு, தேன் சுவை கொண்ட குளிர்ந்த நீராகவும் உள்ளது.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...