அருள்மிகு துர்க்கை அம்மன் திருக்கோவில் (பாலத்தளி)

Primary Deity
பொருந்தாது
Temple Type
Amman Temples
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available

ஸ்தல வரலாறுப்படி: மேயச் செல்லும் மாடுகள், ஒரு குறிப்பிட்ட மேட்டிடம் வந்ததும், மடியிலுள்ள பால் அனைத்தையும் சுரந்துவிட்டு, வற்றிப்போன மடியுடன் வீடு திரும்பின. இந்த நிகழ்வு தொடர்ந்ததால், மாடுகளைப் பின்தொடர்ந்து சென்று கண்காணித்தனர். நடப்பதைக் கவனித்த மக்கள் அந்த மேட்டிடத்தைத் தோண்டிப் பார்த்ததில், அதனடியில் பூமிக்குள் துர்க்கை அம்மனின் சிலை ஒன்று புதையுண்டு கிடந்தது தெரிய வந்தது. சிலையை வெளிக்கொணர்ந்து பிரதிஷ்டை செய்து, கோவில் எழுப்பி வழிபடுகின்றனர். பலா மரங்கள் மிகுதியாகக் காணப்பட்ட பகுதி என்பதால், இவ்வூர் பாலத்தளி எனப் பெயர் பெற்றது.

மூலஸ்தானத்தில் சாந்தமே உருவாக எழுந்தருளியிருக்கும் துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்த வரப்பிரசாதி. சுயம்புவானவள். விஷ்ணு துர்க்கை, வன துர்க்கை, நவதுர்க்கை ஆகிய துர்க்கைகளின் சக்திகளை ஒருங்கே பெற்றிருப்பவள். மேற்கு நோக்கி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். ஐம்பொன்னால் ஆன உற்சவ மூர்த்தம் பேரெழில் கொண்டுள்ளது.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...