சிவபெருமானின் கண்களை, விளையாட்டாக மூன்று விநாடிகளுக்கு, பார்வதி தேவி மூடினாள். சிருஷ்டிகளுக்கு இதனால் இடைஞ்சல் உண்டாகுமென கோபம் கொண்ட சிவபெருமான் சபித்து விடுகிறார்.
சாப விமோசனம் வேண்டி, இத்தலம் வந்த பார்வதி, சரக்கொன்றை மரத்தடியில் தவமிருந்தாள். சிவசாபம் தீர தவமிருந்த பார்வதி முன் பிரத்யட்சமான இறைவன் அவளுக்கு சாப விமோசனம் அளித்து, மீண்டும் அவளை மணந்து கொள்கிறார்.
இச்சையுடன் மீண்டும் இத்தலத்தில் இச்சா சக்தியாக விளங்குகிறாள். செல்வத்திற்கு அதிபதியாக இருந்து, வேண்டுவோர்க்கு நற்பலன்கள் தருகிறாள்.
ஆதியில் புற்று உருவில் இருந்த தினமும் புற்றின் மீது பால் சொரியும் பசு ஒன்று அடையாளம் காட்ட, ஊர் மக்கள், அதை வெளிக்கொணர்ந்து, பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். பின்னர் இந்த சுயம்பு லிங்கத்திற்கு திருமணங்கீஸ்வரர் எனப் பெயர் சூட்டி ஆலயம் எழுப்பியுள்ளனர்.
சக்தி பீடங்களுள் ஒன்று.