இலகுளீசம்:
சுவேதன், சுவேதகேது, சுவேதசீகன், சுவேததாச்சுவன், சுவேதலோகிதன், சுதாரன், துந்துமி ஆகிய எழுவரும் யோகாசார்யா என்னும் பதவியைப் பெற, காஞ்சி நகரம் வந்து தத்தம் பேரில் சிவலிங்கம் அமைத்து வழிபட்டனர். அவற்றுள் இலகுளீசம் ஒன்றே நல்ல நிலையில் உள்ளது.
இரண்யேசம்:
இவ்விறைவனை இரண்யன் வழிபட்டு சாகாவரம் வேண்டிப் பெற்றதாக வரலாறு. ஆகாயம் மற்றும் பூமி ஆகிய இடங்களிலும், வீட்டிற்கு உள்ளே அல்லது வெளியேயும், தனக்கு சாவு நேரக் கூடாதெனவும், மனிதராலும், மிருகங்களாலும், மற்ற உயிரினங்களாலும் தனக்கு சாவு நேரக் கூடாதெனவும் வரம் வேண்டிப் பெற்றதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.