அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் (செட்டிக்குளம்)

Primary Deity
தண்டாயுதபாணி சுவாமி
Temple Type
தண்டாயுதபாணி கோவில்
Location
Contact Number
+91-Not Available

அசுரர்களின் கொட்டத்தை அடக்கி, தேவர்களைக் காப்பாற்ற, அன்னை சக்தியிடம் வேல் வாங்கிக்கொண்டு களம் இறங்குகிறார் முருகப் பெருமான். பின்னர் அசுரர்களை சம்ஹாரம் செய்த செய்தியை அன்னையிடம் தெரிவிக்கின்றார். அப்போது அன்னை தன் கையிலிருந்த கரும்பை முருகனிடம் தந்தார். அந்தக் கரும்புடன் இத்தலம் வந்ததாக வரலாறு. இவ்வூருக்கு வந்திருந்த வணிகன் ஒருவன், இரவில் பேரொளியுடன் தோன்றிய சிவலிங்கத்தையும் அதைத் தேவர்கள் பூஜிப்பதையும் கண்டான். மறுநாள் இந்த நிகழ்வைப் பற்றி பராந்தக சோழனிடம் தெரிவித்தான். பராந்தக சோழனும் அவரது விருந்தினரான குலசேகர பாண்டியனும் இந்த நிகழ்வு நடந்த அரச மரத்தருகே வந்து பார்த்தனர். அப்படி எதுவும் நடந்ததற்கான அறிகுறிகள் ஏதும் அங்கு தெரியவில்லை. அப்போது அங்கு வந்த வயோதிகர் ஒருவர் அவர்களை அழைத்துச் சென்று லிங்கத்தைக் காண்பித்துவிட்டு, அருகிலிருந்த குன்றின் மேல் நின்றுகொண்டு, கையில் கரும்புடன் முருகனாகக் காட்சி தந்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. இதனால் மகிழ்ந்த குலசேகர பாண்டியன், ஊருக்குள் சிவாலயத்தையும் குன்றின் மீது முருகன் கோயிலையும் கட்டியதாக வரலாறு கூறுகிறது.

ஏறிச் செல்ல 240 படிகளும், இறங்குவதற்கு 253 படிகளும் கொண்ட சிறிய குன்றின் மீதுள்ள ஆலயம் இது. மூலஸ்தானத்தில் தண்டாயுதபாணி சுவாமி மூலவராக எழுந்தருளி தரிசனம் தருகின்றார். இது ஒரு சுயம்பு மூர்த்தம். நான்கடி உயரம் கொண்ட அழகான திருமேனி. சுவாமி தனது கரத்தில் 11 கணுக்களையுடைய செங்கரும்பு ஒன்றினை ஏந்தியிருப்பது எங்கும் காணக்கிடைக்காத ஒரு விசேஷ தரிசனம். யானை வாகனத்துடன் காட்சி தருகிறார். மாசி மாதத்தில் 19, 20, 21 ஆகிய தேதிகளில் மாலை நேரங்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் தண்டாயுதபாணி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. குன்றின் அடிவாரத்தில் விநாயகர், இடும்பன், வீரபாகு ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். கோயிலின் முகப்பில் ராஜ கணபதி வீற்றிருக்கின்றார்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...