கல்வெட்டுகளில் இத்தலம் தென்னாற்றூர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மகான்களும், ரிஷிகளும் இளைப்பாறுவதற்காக ஒரு மடம் கட்டப்பட்டது. அன்றிலிருந்து இந்த ஊர் 'மடம்' என்று அழைக்கப்படுகிறது.
இது குலோத்துங்க சோழன் காலத்திய கோவில். ஒரு தடாகத்தை (குளம்) உருவாக்க பூமியைத் தோண்டியபோது ஒரு சிவலிங்கம் கிடைத்ததாம். அந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பியுள்ளனர். இதனால் இறைவனுக்கு தடாகபுரீஸ்வரர் என்ற பெயர் வந்தது.
இக்கோவில் தற்போது பராமரிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது.