சிவபெருமானின் 64 சிவ வடிவங்களுள் ஒன்றாக பூஜிக்கப்படுகின்றவர் ஜ்வரஹரேஸ்வரர். தாரகன் என்னும் அசுரன், தனக்கு அழிவு என்பது சிவபெருமானின் பிள்ளையால்தான் உண்டாக வேண்டும் என்று வரம் பெற்று, தேவர்களை துன்புறுத்தி வந்தான். ஜ்வரன் என்னும் அசுரனும் இவ்வாறே துன்புறுத்தி வந்தான். இவர்களின் சம்ஹாரம் முடிந்தபின், தேவர்கள் கடுமையான வெப்ப நோய் கண்டு அவதியுற்று இவ்விறைவனை வழிபட்டு குணமடைந்தனர் என ஸ்தல வரலாறு கூறுகிறது. மிளகை அரைத்து காப்பு போல பூசி உட்கொண்டால் ஜ்வரம் நீங்கும் என ஐதீகம். வேப்பேரி குளம் உள்ளது. (தற்போது உப்பேழி குளம் என அழைக்கப்படுகிறது)
அருள்மிகு ஜ்வரஹரேஸ்வரர் திருக்கோவில் (காஞ்சி)
Primary Deity
ஜ்வரஹரேஸ்வரர்
Temple Type
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் மூலவராக ஜ்வரஹரேஸ்வரர் (ஜ்வர ஹர). பின்புறம் நின்ற திருக்கோலத்தில் இந்திரனும் இந்திராணியும் காணப்படுகின்றனர். மூலஸ்தானம் செல்ல வடக்கு-தெற்காக படிக்கட்டுகள் அமைத்துள்ளனர். தூங்கானை மாடம் என்கிற கஜப்பிருஷ்ட வடிவில் விமானம் கொண்ட நீள்வட்ட வடிவிலான மூலஸ்தானம். பலகணிகளைக் கொண்ட சுவருடைய கற்கோவில். ஸ்ரீரங்க ப்ரணவ விமானம். மூலஸ்தான படிக்கட்டுகளின் வலதுபுறம் சங்கநிதியும், இடதுபுறம் பதுமநிதியும் காட்சி தருகின்றனர். கருவறைக்கு வெளியே குபேரனின் திருவுருவம் இருக்கின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.