தட்ச பிரஜாபதி இங்கு யாக குண்டம் நிறுவி பெரிய யாகம் ஒன்றைச் செய்தான். சிவபெருமானை அழைக்கவுமில்லை, அவருக்குச் சேர வேண்டிய அவிர்பாகமும் தரவில்லை. இதை எடுத்துச் சொல்ல வந்த பார்வதியையும் அவமானப்படுத்திவிட்டான்.
தன்னை அவமதித்த தட்சனுக்குப் புத்தி புகட்ட, தன்னுடைய உக்ர அம்சமான வீரபத்ரரை அனுப்பி வைத்தார் ஈஸ்வரன்.
ரௌத்ராகாரமாக வந்த வீரபத்ரனைப் பார்த்து தட்சன் (தக்கன்) ஓலமிட்டதால், இவ்வூர் தக்கோலம் எனப் பெயர் கொண்டதாகக் கூறப்படுகிறது. நந்தியின் வாயில் இருந்து எப்போதும் நீர் சுரந்து கொண்டே இருப்பதால் இவ்வூருக்கு திருஊறல் எனப் பெயர் வந்தது.
பிரம்மா, விஷ்ணு மற்றும் பார்வதி தவக்கோலம் பூண்ட இடம் தக்கோலம்.
ராஷ்டிரகூடப் படைகளுக்கும் சோழப் படைகளுக்கும் போர் நடந்த இடம் தக்கோலம். (கி.பி 949).
தேவாரத் திருத்தலம்.