சப்த மாதர்களுள் ஒருவரான வைஷ்ணவி இவ்விறைவனை பூஜித்து வழிபட்டுள்ளார். நந்தி தேவர் இவ்விறைவனை பூஜித்து பஞ்சாட்சர ஜப சித்தி பெற்றார். இதனால் இவ்வூரை நந்திகேஸ்வரம் என்றும் கூறுவர். நந்திதேவர் இவ்விறைவனை பூஜிக்கும் புடைப்பு சிற்பம் ஒன்று அழகாக உள்ளது.
நந்தி தேவரும், சப்த மாதர்களில் ஒருவருமான வைஷ்ணவியும் வழிபட்டதால் இவ்வூர் நந்திமங்கை எனப் பெயர் கொண்டது. தற்போது நல்லிசேரி எனப்படுகிறது.