சிவபெருமானை நோக்கி நீண்ட காலம் தவமிருந்தார் உரோம மகரிஷி. பல சித்திகள் பெற்றதால் அவரது ரோமங்கள் பொன்னாக மாறி உதிர்ந்தன. தனக்கு ஏற்பட்ட சிறப்பாக கருதி கர்வம் கொண்டார் மகரிஷி. இவரது கர்வத்தினை அடக்க நினைத்த சிவபெருமான், உதிர்ந்தது போக மீதியிருந்தவற்றை சாதாரண கேசமாக மாற்றிவிட்டார். தனது அகங்காரத்தை விடுத்து (தவம் தொடர்ந்தார்).
இங்குள்ள தீர்த்தக் குளத்தில் சீதா தேவி நீராடியபோது ஏழு முடிகள் உதிர்ந்தன. இதனால் 'கூந்தல் உதிர்ந்த ஊர்' எனப் பெயர் கொண்டு, நாளடைவில் கூந்தலூர் என்றானதாக கூறப்படுகிறது. தென்புறமாக சீதா குளம் இருக்கின்றது.
'ஜம்பு' என்றால் நரி. நரிகள் நிறைந்த ஆரண்யம் என்பதாலும், நரி வழிபட்ட இறைவன் என்பதாலும் இவ்விறைவனுக்கு ஜம்புகாரண்யேச்வரர் என்ற பெயர் வந்தது.
இது ஒரு தேவார வைப்புத்தலம்.