எயில் எனப்படும் சோழர்களின் கோட்டை அருகே இருந்ததால் பேரெயில் எனப்பட்டதாகக் கூறப்படுகிறது.
புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் இடம் பெற்ற பாடல்களைத் தந்த பேரெயில் முறுவலார் என்ற பெண் கவி பிறந்த ஊர். பேரையூர் என நிறைய ஊர்கள் இருப்பதால், வித்தியாசப்படுத்தவேண்டி ஓகைப் பேரெயூர் என வழங்கலாயிற்று.
வங்காரப் பேரெயூர் என்றும் அழைப்பர். கோவிலுக்கு எதிரே திருக்குளம். ஊருக்குத் தெற்கே அரை மைல் தூரத்தில் வெள்ளையாறு ஓடுகின்றது.