தாய் வயிற்றில் இருந்தபோதே, கரிகாற் சோழன் தந்தையான இளஞ்செட்சென்னியை இழந்து, அரசனாகும் உரிமையோடு பிறந்தான். பிறந்த குழந்தையைக் கொன்றுவிட்டு, அரசைக் கைப்பற்றும் சூழ்ச்சிகள் அரங்கேறின. கரிகாலனின் தாய்மாமனான இரும்பிடர்த்தலையார் குழந்தையையும் அரசியையும் திருப்பனையூருக்கு அனுப்பி வைத்தார்.
இவ்வாலயத்துள் அடைக்கலம் தேடி வந்த தாய் - சேய் இருவரையும், இங்கிருந்த விநாயகர் துணையாக இருந்து அவர்களைக் காப்பாற்றினார். எட்டு வயது வரை பிள்ளையாரின் அரவணைப்பில் வளர்ந்தான் கரிகாலன்.
திருப்புகலூரில் சுந்தரர் பெற்ற பொன்னை மாற்றுரைத்த பிள்ளையார் என்பதனால் மாற்றுரைத்த பிள்ளையார் என்ற பெயர் வந்தது.
சுந்தரருக்கு நடனக்காட்சி காட்டியருளிய ஸ்தலம்.
துணை இருந்த விநாயகர் சந்நிதிக்கு பின்புறமாக, ஆண் - பெண் ஆகிய இரண்டு பனைமரங்கள் உள்ளன. இவை வளர்ந்து முதிர்ச்சியடையும் காலத்தில், வித்திட்டு முளைக்காததாக, அடி வேரில் இரண்டு பனங்கன்றுகளை (வாழையைப் போல்) தோற்றுவிக்கின்றன. ஆண் - பெண் வாரிசு மாறாமல் தோன்றும் அதிசயம் நிகழும் ஸ்தலம்.