நக்கீரருக்கும் அருணகிரிநாதருக்கும் காட்சி தந்த ஸ்தலம் இது. இச்சா சக்தியாக வள்ளியும், கிரியா சக்தியாக தெய்வயானையும், ஞான சக்தியாக முருகனும் காட்சி தருகின்றனர். இயற்கை வளமும் பசுமையும் கொண்ட சோலையாக சூழ்ந்துள்ளன. மூலிகைகள், பழவகைகள் ஆகிய மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் 'சோலைமலை' எனப்பட்டது. முன்நாளில் வேல் மட்டும் ஸ்தாபித்து வழிபட்டனர். இதனால் 'வேற்கோட்டம்' என அழைத்தனர். சிறுவன் வடிவிலிருந்த முருகன், அவ்வையாரின் தமிழை சோதிக்க எண்ணி, "சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?" எனக் கேட்டு, நாவல் மரக்கிளையை உலுக்கி பழங்களை கீழே உதிரச் செய்த இடம் என்பதால் 'பழமுதிர்சோலை' எனப் பெயர் கொண்டது. (பழம் - உதிர் - சோலை). முருகன், வள்ளியை திருமணம் புரிவதற்காக, விநாயகரே யானை வடிவில் வந்து உதவிய இடம் என்று கச்சியப்ப சிவாச்சாரியார் பாடலில் வருகிறது.
அருள்மிகு சோலைமலை முருகன் திருக்கோவில் (பழமுதிர்சோலை)
Primary Deity
சோலைமலை ஆண்டவர்
Temple Type
Murugan Temples
Location
திருநெல்வேலி
Contact Number
+91-Not Available
முதலில் கணபதியை தரிசித்து ஆசி பெற்று, அடுத்து சோலைமலை ஆண்டவனை தரிசிக்கின்றனர். பிரதான கருவறையில் மூலவராக, 'சோலைமலை ஆண்டவர்' எனப் போற்றப்படும் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார். மீண்டும் மீண்டும் தரிசிக்கத் தூண்டும் பேரழகான திருவுருவம். வள்ளி, தெய்வயானை தேவியர்கள் உடன் உள்ளனர். ராஜகோபுரம், கொடிமரம் தாண்டியவுடன் காணப்படும் மண்டபத்தில் முருகனின் திருவிளையாடல்கள் வரையப்பட்டுள்ளன. அரளி புஷ்பம் விசேஷம். தேன், தினைமாவு நைவேத்தியம். அறுபடை வீடுகளுள் ஒன்று - ஆறாவது படை வீடு.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.