அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோவில் (ஆனந்தபுரம்)

Primary Deity
சோமேஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
Contact Number
+91-Not Available

சந்திரன் இத்தலத்தில் தீர்த்தக் குளம் ஒன்று உண்டாக்கி, இவ்விறைவனை பூஜித்து, தனக்கேற்பட்ட சாபத்தைப் போக்கிக் கொண்டதால், சுவாமியை சோமேஸ்வரர் என்றும், அம்பாளை சோமகலாம்பிகை என்றும் அழைக்கின்றனர்.

மூலவர்: சோமேஸ்வரர், அம்பாள்: சோமகலாம்பிகை.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான சோமேஸ்வரர். கிழக்கு பார்த்த சந்நிதி.

தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் அம்பாள் எழுந்தருளி தரிசனம் தருகின்றாள்.

விநாயகர், சுப்ரமண்யர், ஸ்வர்ண பைரவர், நாகநாதர், பிரம்ம சண்டிகேஸ்வரர் மூர்த்தங்களை கோஷ்டத்தில் தரிசிக்கலாம். மகாமண்டபத்தில் தெற்கு பார்த்து எழுந்தருளியுள்ள ராகு கால சாந்த துர்க்கை மிகுந்த வரப்பிரசாதி. துர்க்கை சந்நிதியில் நின்றபடியே மூலவரையும் அம்பாளையும் ஒருசேர தரிசிக்கும் வகையில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

மூலவருக்கு பூஜை முடிந்து, அடுத்து துர்காம்பிகைக்கு பூஜை செய்து, பின்னர் சோமகலாம்பிகைக்கு பூஜை செய்கின்றனர்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...