சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்ற தர்க்கத்திலிருந்த, சங்கன் - பதுமன் எனப்படும் இரண்டு பாம்புகள், தங்களுக்குள் தெளிவு பெற்று, இவ்வூரின் களாக்காட்டில் சுயம்புவாய் எழுந்தருளியிருந்த லிங்க வடிவத்தை பூஜித்து வழிபட்டனர். புவன பூக்களால் அர்ச்சித்து வழிபட்டமையால் இறைவனுக்கு புவனநாதர் என்ற பெயர் வந்தது.
ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கோவில். செண்பகவேந்தன் எனும் அரசனின் கனவில் தோன்றி இறைவன் கூறிய இடத்தில் அமைக்கப்பட்ட கோவில். ஊரின் நடுவே மேட்டுப் பகுதியில் உள்ளதால் வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்படுவதில்லை. அருகே உள்ள குருமலையிலிருந்து இதமான காற்று வீசுகிறது.