கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி, துங்கபத்ரா ஆகிய நதிகளுக்கு இடையே யார் பெரியவர்? என்ற போட்டி இருந்தது. சிவபெருமான் நந்தியம்பெருமானை அழைத்து அனைத்து நதிகளையும் குடிக்கச் சொன்னார். நந்தியின் மூடிய வாயிலிருந்து கங்கை வழிந்ததால் கங்கையே பெரியது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதுவே கொள்ளிடம் வரை நந்தியாறு எனும் பெயரில் ஓடுகிறது.
நந்தியாறு உற்பத்தி ஆகும் ஊற்றுதான் திருக்குளம். அதனால் இவ்வூர் ஊற்றத்தூர் எனப் பெயர் பெற்றது.
அப்பர் பெருமான் இவ்வூருக்கு வந்தபோது ஊர் முழுக்க சிவலிங்கங்கள் காட்சியளித்ததால், தரையில் கால் வைக்கலாகாது என 5 கி.மீ. தள்ளி நின்று பாடினாராம். அப்படிப் பாடிய ஊரே பாடலூர் ஆகும்.