நந்தியின் சாபம் பெற்ற விஷ்ணுவின் சாபம் நீங்கிய ஸ்தலம். திருமால் வராஹ வடிவில் இவ்விறைவனை பூஜித்து வழிபட்டுள்ளார். இதை விளக்கும் புடைப்பு சிற்பம் ஒன்று தட்சிணாமூர்த்தி சந்நிதி அருகே மதிற்சுவரில் காணப்படுகிறது. வராஹமூர்த்தியின் திருமேனியில் பட்ட மண் துகள்களை பூமா தேவி திரட்டி சிவலிங்கமாக அமைத்து வழிபட்டதாக கூறுகின்றனர்.
இத்தலத்தில் பூமிக்கடியில் சிவலிங்கம் இருப்பதால், அதன் மீது நடக்க மனமில்லாமல், அங்கப்பிரதட்சிணம் செய்து இறைவனை தரிசித்து விட்டு, பின்னர் ஊரின் எல்லைக்கப்பால் நின்று பதிகம் பாடினார் திருஞானசம்பந்தர். அப்படி நின்று பாடிய இடம் சுவாமிகள் துறை என்றழைக்கப்படுகிறது.
தேவாரத்திருத்தலம்