அம்பாள் சந்நிதி எதிரேயுள்ள தொட்டியில் மஞ்சள் அரைத்துப் போடுகிறார்கள். இந்திரன் அம்பாளைப் பூஜித்தபோது மலர்கள் மஞ்சளாக மாறி முன்னாலுள்ள தொட்டியில் விழுந்ததாம். இதனால் பக்தர்கள் மஞ்சளைத் தொட்டியிலிடுவது வழக்கமானது.
ஹிரண்ய வதத்தினால் கொண்ட தோஷம் நீங்க, லட்சுமி நரசிம்மர் இவ்விறைவனை வழிபட்டுள்ளதாக ஐதீகம்.
கும்பாபிஷேகப் பணிகளின்போது லிங்கத்தின் ஆவுடையின் அடியைக் காண முடியாமல் கஷ்டப்பட்டதாக அர்ச்சகர் தெரிவிக்கின்றார்.