தேன் திவலைகள் சிந்தும் பூக்களுடைய சிந்துபூந்துறையின் சோலையில் தங்க விருப்பம் கொண்டு ஆறுமுகன் தானே தேர்ந்தெடுத்த இடம் என்பதனால், சோலை முருகன் கோவில் எனப் பெயருற்று, நாளடைவில் மருவி சாலை முருகன் கோவில் என்றானதாம். பாளையஞ்சாலை குமாரசுவாமி என்றும் கூறுவார்கள். சிந்துபூந்துறையில் சிற்பி ஒருவன், திருச்செந்தூருக்காக வடித்த சிலை இங்கேயே நிலை கொண்டதாம். அசைக்கக் கூட முடியவில்லை. தனக்கு இங்கே ஒரு கோவில் கட்டப்பட வேண்டும் என அசரீரி ஒலித்ததாம். அதன்படியே அந்த சிலையை பிரதிஷ்டை செய்து ஆறுமுக வேலனுக்கு இங்கு கோவில் எழுப்பியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
அருள்மிகு சாலைக்குமார சுவாமி திருக்கோவில், திருநெல்வேலி
Primary Deity
சாலைக்குமார சுவாமி எனப்படும் ஆறுமுக வேலன்
Temple Type
Murugan Temples
Location
திருநெல்வேலி
Contact Number
+91-Not Available
ஆலயத்துள் நுழைந்ததும் நம்மை விநாயகப் பெருமான் வரவேற்று ஆசி வழங்குகின்றார். மூலஸ்தானத்தில் மூலவராக ஆறுமுக வேலன் எழுந்தருளி அருள் புரிகின்றார். நான்கரை அடி உயரம் கொண்ட அழகான திருமேனி. பன்னிரு திருக்கரங்களும் ஆறுமுகமும் மனதை விட்டு அகலாது. முருகனைப் பார்த்தபடி வள்ளி மற்றும் தெய்வயானை தேவியர்கள் காட்சி தருகின்றனர். சந்தனக் காப்பில் அழகுக்கு அழகு சேர்க்கும் ஆறுமுக வேலனைக் காண எண்ணற்ற மக்கள் கூடுகின்றனர். மூலஸ்தானத்தின் பின்புறமாக பஞ்சலிங்கங்கள், ஷண்முகர், சண்டேசர், சனி பகவான் ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.