அருள்மிகு சர்ப்ப விநாயகர் திருக்கோவில் (திருப்பாலைத்துறை)

Primary Deity
சர்ப்ப விநாயகர்
Temple Type
Vinayagar Temples
Location
Contact Number
+91-Not Available

நாக தோஷங்கள் நீங்கவும், நச்சுப் பிணிகள் தீரவும் இவரை வழிபடுகின்றனர். மயிலாடுதுறையைச் சேர்ந்த சந்திரகாசு என்ற கலைஞர் இவரை வடிவமைத்ததாகக் கூறுகின்றனர். பங்கஜவல்லி உடனுறை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலருகேயுள்ள சிவசக்தி காளியம்மன் கோவிலின் தென்புறமாக சர்ப்ப விநாயகர் கோவில் உள்ளது.

மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள சர்ப்ப விநாயகர் மிகுந்த வரப்பிரசாதி. மிக அழகான திருவுருவம். ஐந்து தலை நாகம் ஒன்று குடை பிடிக்க, அரைஞாண் கயிறாக ஒரு சர்ப்பமும், இடையில் கட்டிய ஆடையில் ஒரு சர்ப்பமும், பூணூலாக ஒரு சர்ப்பமும், கைகடகங்களாக இரண்டு சர்ப்பங்களும் அணிந்து காட்சி தருகின்றார். பத்துக் கரங்கள் - அவற்றில் கொய்யாப்பழம், கதை, கரும்பு, வில், சூலம், சக்கரம், தாமரை, நெற்கதிர், பாசம், நீலோத்பவம், தந்தம் ஆகியன ஏந்தியுள்ளார். துதிக்கையில் அமுதகலசம் வைத்துள்ளார்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...