அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் (அம்மாசத்திரம்)

Primary Deity
சப்தரிஷீஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
Contact Number
+91-Not Available

பிரதாபசிம்மன் இவ்வாலயத்தை கட்டி முடித்து அருகில் அவனது மனைவி சக்வாரம்பா பெயரில் ஒரு சத்திரம் நிறுவினான். அதை நினைவு கூறும் வகையில் இவ்வூர் சக்வாரம்பாபுரம் என அழைக்கப்பட்டது. பின்னாளில் அம்மணி அம்மாள் சத்திரம் என அழைக்கப்பட்டு தற்போது அம்மாசத்திரம் என்றானது.

சப்தரிஷிகளான அத்ரி, பிருகு, புலஸ்தியர், வசிஷ்டர், கௌதமர், அங்கீரசர், மரீசி ஆகிய மஹரிஷிகள் பார்வதி - பரமேஸ்வரர் திருமணத்தை நடத்தி முடித்தவர்கள். அவர்களின் திருவுருவங்களை தரிசிக்கும் பாக்கியம் இவ்வாலயத்தில் கிடைக்கின்றது.

மூலவர்: சப்தரிஷீஸ்வரர், அம்பாள்: ஞானாம்பிகை.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சப்தரிஷீஸ்வரர். ஒளி வீசும் அழகிய திருமேனி.

அம்பாள் ஞானாம்பிகை தனி சந்நிதி கொண்டுள்ளார். அம்பாள் சந்நிதியின் கோஷ்டத்தில் ப்ராம்மி, வைஷ்ணவி, கௌமாரி, இந்திராணி, மாகேஸ்வரி ஆகிய பஞ்ச மாதாக்கள் இடம் பெற்றுள்ளனர்.

பிரகார வலச்சுற்றில் நான்கு பெரிய சிவலிங்கங்களை தரிசிக்கலாம். பிள்ளையார், முருகன் மற்றும் சப்த ரிஷிகளின் திருவுருவங்கள் பிரகாரத்தில் இடம் பெற்றுள்ளனர்.

மஹா மண்டபக் கூரையில் நவகிரக யந்திர மண்டலம் அமைத்து இருப்பது அழகாக இருக்கின்றது.

12 ராசிகளின் சிற்பங்களை அற்புதமாக அமைத்துள்ளனர். ஒரு பெரிய சதுரத்தில் 81 கட்டங்களும் அதனுள் தமிழ் இலக்கங்களும் உள்ளன. இதனருகே எட்டுத் தளங்களின் மத்தியில் ஏழு திரிகோணங்கள் அடங்கிய ஸ்ரீ சக்கரம், சப்தரிஷி சக்கரம், பிரபஞ்ச சக்கரம் ஆகியன அமைத்துள்ளனர்.

இங்கு எழுந்தருளியிருக்கும் காலபைரவர் மிகுந்த வரபிரசாதி என்பர். பௌர்ணமி, அஷ்டமி தினங்களில் நடைபெறும் விசேஷ பூஜைகள் பிரசித்தம். காசிக்கு சமமாக கருதப்படும் காலபைரவ க்ஷேத்ரம்.

ஓம் காலத் வஜாய வித்மஹே. சூல ஹஸ்தாய தீமஹி. தன்னோ பைரவ ப்ரசோதயாத்.

காசிக்கு சமமான இத்தலத்து காலபைரவரை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...