1935ல் துவங்கப்பட்ட இக்கோவிலில், 1950ல் சனீஸ்வர பகவான் பிரதிஷ்டை செய்யப்பட்டு, 2003ல் கும்பாபிஷேகம் நடந்தேறியது. காஞ்சி மஹா பெரியவர் இக்கோவிலுக்கு 'வட திருநள்ளாறு' எனும் பெயரைச் சூட்டினார் எனக் கூறப்படுகிறது.
அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோவில் (மேற்கு மாம்பலம்)
Primary Deity
ஸ்ரீ யக்ஞ விநாயகர், ஸ்ரீ சனீஸ்வர பகவான், ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர்
Temple Type
நவக்கிரக கோவில்கள்
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available
மூன்று பிரதான சந்நிதிகளை வரிசையாகக் கொண்டுள்ள மூலஸ்தான மண்டபம். நடு சந்நிதியில் ஸ்ரீ யக்ஞ விநாயகர் மூலவராக எழுந்தருளி ஆசி வழங்குகின்றார். கம்பீரமாகக் காட்சி தரும் அழகான திருமேனி. இடது பக்க சந்நிதியில் சனீஸ்வர பகவான் எழுந்தருளியுள்ளார். நீளா தேவி உடன் உள்ளார். இங்கு சாயாபுத்ரர் அனுக்ரஹ மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். வலப்புற சந்நிதியில் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் எழுந்தருளி தரிசனம் தருகிறார். கையில் சஞ்சீவி மலையுடன் தரிசனம் தருகின்றார். பத்து கரங்களினால் பக்தர்களை அரவணைத்துக் காக்கிறார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.