அருள்மிகு சனத்குமாரேஸ்வரர் திருக்கோவில் (திருத்தண்டிகைபுரம் - எஸ்.புதூர்)

Primary Deity
ஸ்ரீ சனத்குமாரேஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
விழுப்புரம்
Contact Number
+91-Not Available

பாற்கடலிலிருந்து அமிர்தம் எடுக்க கடைந்தபோது தோன்றிய சங்கநிதி, பதுமநிதி ஆகிய ஐஸ்வர்யங்களுக்கு அதிபதியாக குபேரனை நியமித்தார் நாராயணன். குபேரனும் தர்ம நிலை தவறாது பாதுகாத்து வந்தான். ஒரு நாள் சபலம் கொண்டு ஒரு பாதகத்தைச் செய்துவிட்டதால், அஷ்ட ஐஸ்வர்யங்களும், நவநிதிகளும் குபேரனை விட்டு நீங்கிவிட்டன. தான் செய்த தவறை எண்ணி வருத்தமுற்ற குபேரன், இழந்த செல்வங்களை மீண்டும் பெற வழி சொல்லும்படி சப்தரிஷிகளிடம் கேட்டான்.

சப்தரிஷிகள், திருத்தண்டிகைபுரம் சென்று சோம தீர்த்தத்தில் நீராடி சனத்குமாரேஸ்வரரையும் சௌந்தர்யநாயகியையும் வழிபடும்படி கூறினார்கள். அவர்களின் அறிவுரைப்படி இத்தலம் வந்து இவ்விறைவனையும் அம்பிகையையும் வழிபட்டு, இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றான். தன்னைப் போல கஷ்டப்படும் பக்தர்களை ரட்சிக்க, இத்தலத்திலேயே கோவில் கொள்ளும்படி வேண்டினான் என ஸ்தல வரலாறு கூறுகிறது.

மூலவர்: ஸ்ரீ சனத்குமாரேஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ சௌந்தர்யநாயகி.

மூலஸ்தானத்தில் ஸ்ரீ சனத்குமாரேஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். தேஜோமயமாக ஒளி வீசும் லிங்க மூர்த்தம். சந்நிதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது.

அழகிய கோஷ்ட மூர்த்தங்களைக் காணலாம். வலச்சுற்றில் பிள்ளையார், முருகப் பெருமான், சூரியன், சந்திரன், அப்பர், ஞானசம்பந்தர் ஆகியோரின் திருவுருவங்களை தரிசிக்கலாம்.

தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் ஸ்ரீ சௌந்தர்யநாயகி நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றாள். சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. பெயருக்கேற்றபடி சௌந்தர்யமாகக் காட்சி தருகின்றாள்.

ஒவ்வொரு பௌர்ணமியிலும் அம்பாளுக்கு விசேஷ அலங்காரங்களும், பூஜைகளும் செய்கின்றனர். மாசி மாத பௌர்ணமியில் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

12 ராசிகளையும் பீடமாக அமைத்து அதன் மேல் அமர்ந்த தட்சிணாமூர்த்தியின் எழில் கோலம் மனதை விட்டு அகலாது. இத்தலம் சகல தோஷங்களையும் நீக்கும் குரு க்ஷேத்ரமாக விளங்குகிறது.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...