சந்திரன் சிவ பூஜை செய்த தலம் இது. சந்திரனுக்கு அருள்பாலித்த இறைவன் சந்திரசேகரர் எழுந்தருளி இருப்பதால், இத்தலம் சந்திரசேகரபுரம் எனப் பெயர் பெற்றது. சந்திரனுடைய தசாபுக்தியினால் ஏற்படும் கஷ்டங்களிலிருந்து விடுபட இத்தலத்தில் சந்திரனை வழிபட்டால் பரிகாரமாக அமையும்.
சாப விமோசனம் பெறவும், இழந்த கலைகளை மீண்டும் பெறவும், சந்திரன் ஒவ்வொரு சிவாலயத்திற்கும் சென்று சிவபெருமானை வழிபட்டு, ஒவ்வொரு கலையாக மீண்டும் பெற்று, கடைசியாக இத்தலத்திற்கு வந்து இவ்விறைவனை வழிபட்டு 64வது கலையைப் பெற்று, வசீகர முகத்துடன் திகழ்ந்தான். இறைவனும் தனது ஜடாமுடியில் சூடிக் கொண்டார் என்பது தல வரலாறு. சந்திரன் அடைக்கலம் பெற்றதால் இவ்வூர் சந்திரசேகரபுரம் என்றானது.