நந்தி தேவரிடம் உபதேசம் பெற்ற சிவயோகி ஒருவர், க்ஷேத்ராடனம் செய்து கொண்டு வரும் வழியில், தெற்கு - வடக்காக காவிரி பாயும் ரம்யமான இக் கிராமத்தைக் கண்டதும், இங்கேயே தங்கிவிட ஆசை கொண்டார்.
மல்லிகை மலர்களால் இறைவனை அர்ச்சித்து, தமது ஆத்மார்த்தமான பூஜைகளை செய்து வந்தார். இதனால் மகிழ்ந்த சிவபெருமான் நேரில் பிரத்யட்சமாகி கூடு விட்டு கூடு பாயும் சித்திகளை அருளினார். சித்தரின் வேண்டுகோளுக்கிணங்க இங்கேயே கைலாசநாதராக கோவில் கொண்டார்.
இந்த சித்தரே மாடு மேய்க்கும் மூலன் என்பவனின் உடலில் புகுந்து வந்து, திருமூலர் என்ற பெயரில் உலகுக்கு திருமந்திரத்தை உபதேசித்தவர்.
சித்தரால் மல்லிகை மலர்கள் கொண்டு அர்ச்சித்து பூஜித்ததால் இவ்வூர் சித்தமல்லி எனப் பெயர் பெற்றது.