அரசன் ஒருவன் இப்பகுதி அருகே தேரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பூமியில் புதையுண்டிருந்த லிங்கத்தின் மீது தேர் சக்கரம் ஏறியது. லிங்கத்திலிருந்து ரத்தம் வெளிவரவே பயந்துபோன அரசன் கீழே இறங்கி பார்த்தபோது, லிங்கம் புதையுண்டிருப்பது தெரிய வந்தது. அதே இடத்தில் லிங்கத்திற்கு ஒரு கோயில் எழுப்பினான் என வரலாறு.
தேர் சக்கரம் லிங்க பாணத்தை அழுத்தியபடியால், லிங்கம் (குள்ளமாக) குறுகலாக காட்சி தந்தது. இதனால் குறுங்காலீஸ்வரர் என்ற பெயர் வந்தது.
ஸ்ரீ ராமரின் புதல்வர்களான லவனும்-குசனும் வழிபட்ட ஸ்தலம். தந்தையை எதிர்த்து நின்ற தோஷம் போவதற்காக, வால்மீகி முனிவரின் யோசனைப்படி, லிங்கம் ஒன்றை ஸ்தாபித்து வழிபட்டதாக கூறப்படுகிறது. குசன் பூஜித்ததால் குசலபுரீஸ்வரர் என்ற பெயர் வந்தது.
கோ (பசு) - அயம் (இரும்பு) - பேடு (வேலி) - கோயம்பேடு. கோ சம்ரக்ஷணம் நடந்த இடம்.
லவகுச புஷ்கரிணியில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் தருகின்றனர். தர்ப்பணம் செய்ய கோயிலிலேயே இலவச ஏற்பாடு செய்து தருவதாக கூறப்படுகிறது.