அருள்மிகு காளி கோவில் - காளி பாரி (மேற்கு மாம்பலம்)

Primary Deity
-
Temple Type
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available

அசுரர்களை வென்ற காளி, தனது ஆங்காரத்தையும் உக்ரத்தையும் குறைக்காமல் எதிரே வருபவர்கள் அனைவரையும் அழிக்கத் தொடங்கினாள். சிவபெருமான் தரையில் படுத்து விடுகிறார். அதை கவனியாமல் மேலே காலை வைத்து விட்ட காளி, தன் தவறை உணர்ந்து வெட்கப்பட்டு சாந்தமடைகிறாள். இதை சித்தரிக்கவே சிவபெருமான் மீது கால் வைத்து கோலத்தில் காட்சியளிப்பதாக, கோவில் செயலாளர் விவரித்தார். பாரி என்றால் இருப்பிடம் - காளியின் இருப்பிடமாகிய இக்கோவில் கல்கத்தா தக்ஷிணேஸ்வரர் கோவிலின் உபபீடம் போல் உள்ளது. 1981ஆம் வருடம் பிப்ரவரியில் ராமகிருஷ்ணா மிஷனைச் சேர்ந்த ஸ்வாமி லோகேஷ்வரானந்தாஜி அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக குறிப்பொன்று கூறுகிறது.

மூலஸ்தானத்தில் மூலவராகிய ஸ்ரீ காளி மாதா மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். பவதாரிணி காளி என்பார்கள். சிவந்த கண்கள், நீட்டிய நாக்கு, சண்டா - முண்டா அசுரனின் வெட்டப்பட்ட தலை ஒரு கையில், ரத்தம் தோய்ந்த கத்தி மற்றொரு கையில், அபய முத்திரையுடன் ஒரு கை, ஆசிர்வதிக்க ஒரு கை என நான்கு கைகளுடன் காட்சி தருகிறாள். இரு பக்கமும் நரிகள் உள்ளன. சிவபெருமான் கீழே படுத்திருக்க அவர் மீது கால் வைத்த கோலம். இடப்புறம் சாரதா தேவியும், வலதுபுறமாக ராமகிருஷ்ண பரமஹம்ஸரும் காட்சி தருகின்றனர். பிரதக்ஷிண சுற்றில் விநாயகர் மற்றும் சிவபெருமானின் தரிசனம் கிடைக்கிறது. பவானீஸ்வரர், பவானிநந்தன் என்ற பெயர்கள். நவராத்திரியின்போது ஸ்ரீ துர்க்கா தேவி ஸ்தாபிக்கப்பட்டு பூஜித்து விழா கொண்டாடுகின்றனர். தீபாவளியன்று ஸ்ரீ சாமுண்டி பூஜை செய்கின்றனர். ரோஜாப்பூ வெறும் அழகுக்காக மட்டுமே, பவித்ரமானது அல்ல என்ற கருத்தில் காளிக்கு ரோஜா மலர் சாத்தவது இல்லை.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...