தனஞ்சயன்-காந்தி சுந்தரம் தம்பதியினரின் இல்லற வாழ்க்கையில் பல விதமான இடையூறுகளும், சஞ்சலங்களும் எதிர்கொண்டன. மன அமைதி வேண்டி க்ஷேத்ராடனம் புறப்பட்டு சென்ற தனஞ்சயன் மீண்டும் இவ்வூருக்கு வந்தபோது, லிங்கம் ஒன்றை ஸ்தாபித்து வழிபட்டு வந்தான். அவனுடைய லிங்கத்திலிருந்து வெளிப்பட்ட இறைவன், அவனுக்கேற்பட்ட சோதனைகளுக்குரிய காரணங்களை விளக்கிக் கூறினார் என செவி வழி கதை ஒன்று நிலவுகிறது.
நீர் தரும் மேகம் காரணி எனப்படும். அதற்கு காரணமானவன் இறைவன். காரணத்திற்கே காரணமாக இருப்பவன் என்பதால் காரணிஸ்வரன் என்ற பெயரைக் கொண்டாரோ?
சென்னையிலுள்ள சப்த ருத்ர ஸ்தானங்களுள் ஒன்று.