நிருபமுனி, தவமுனி, சரமுனி ஆகிய மூவரும் கடுந்தவம் மேற்கொண்டனர். சிவகணங்களில் ஒருவராகும் பேற்றைப் பெற்றார் நிருபமுனி. மற்றைய முனிகள் நற்கதி பெற்றனர். இவர்களின் தவத்தை கலைக்க முயற்சிகள் மேற்கொண்ட மன்மதன், தான் செய்த பிழைகளை பொறுத்து மன்னித்தருள வேண்டி, இங்கு தவம் மேற்கொண்டான். பிரத்யட்சமான இறைவன், அவனை மன்னித்து நற்கதி வழங்கினார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
ஆதி காலத்தில் வில்வ மரங்கள் மிகுந்திருந்த பகுதியாக இருந்ததால், வில்வ நல்லூர் எனப் பெயர் கொண்டு, காலப்போக்கில் மருவி வில்லியனூர் என்றானதாம்.
தேவார வைப்புத் தலம்.