அருள்மிகு காட்டழகர் திருக்கோவில் (செண்பகத்தோப்பு)

Primary Deity
காட்டழகர் எனப்படும் சுந்தரராஜப் பெருமாள்
Temple Type
விஷ்ணு கோவில்கள் (பொது)
Location
கோவை
Contact Number
+91-Not Available

Information not available.

மலைத்தொடரின் நடுவேயுள்ள பள்ளத்தாக்கின் உச்சிக் குன்றில் அமைந்துள்ள கோவில். இது மண்டூக மலை எனப் பெயர் பெற்றது.

செண்பகத்தோப்பு வரை வாகனத்தில் செல்லலாம். அதன்பின் மலைப்பாதையில் 5 கி.மீ. தூரம் நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டும். 247 படிகள் ஏற வேண்டும். இயற்கை காட்சிகள் நிறைந்த வழிப்பாதை.

மூலஸ்தானத்தில் மூலவராக காட்டழகர் எனப்படும் சுந்தரராஜப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். பெயருக்கேற்ப அழகான திருமேனி. ஸ்ரீதேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர்.

பதினெட்டாம்படி கருப்புசாமி, யமன், காலன், தூதன் ஆகியோரின் திருவுருவங்களைக் காணலாம்.

திருமாலிருஞ்சோலை கள்ளழகரே இங்கு காட்டழகராக எழுந்தருளியுள்ளார் எனக் கூறப்படுகிறது. இவர் ஸ்ரீவில்லிப்புத்தூர் பிரம்மோத்ஸவத்தின் பஞ்ச கருட சேவையில் எழுந்தருளுவார்.

இங்குள்ள தீர்த்தத் தொட்டியில் நீர்வீழ்ச்சி வீழ்கிறது. இதுவே அழகர் தீர்த்தம் எனப்படும் புனித நீர். நூபுர கங்கை என்றும் அழைக்கப்படுகிறது.

வனவிலங்குகள் நிறைந்த பிரதேசமாக இருப்பதால், பக்தர்கள் சென்று தரிசித்துவிட்டு உடனடியாகத் திரும்பிவிடுவார்கள்.

சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டும் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கோவில் திறந்திருக்கும். மற்ற நாட்களில் அர்ச்சகருக்குத் தெரிவித்துவிட்டுச் சென்று தரிசிக்கலாம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...