அருள்மிகு கவலை நீக்கும் முருகன் திருக்கோவில் (காக்கையாடி)

Primary Deity
முருகப் பெருமான்
Temple Type
Murugan Temples
Location
Contact Number
+91-Not Available

இரண்டாம் குலோத்துங்கன் சேர-பாண்டியர்களை வென்று, வெற்றியின் சின்னமாக இவ்வாலயத்தைத் திருப்பணி செய்தான் எனக் குறிப்பொன்று கூறுகிறது. சீதைக்குத் துன்பங்களை விளைவிக்க, காக்கை வடிவம் கொண்ட ராவணன் அந்தப் பாவத்திலிருந்து விடுபட இங்கு வழிபாடு செய்தமையால் இவ்வூருக்குக் காக்கையாடி எனப் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

கவலைகளைப் போக்கும் காக்கையாடி முருகன் எனப் பிரசித்தம்.

மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் முருகப் பெருமானின் அழகை வர்ணிக்க இயலாது. பார்த்துக் கொண்டே இருக்கத் தூண்டும் அற்புதமான திருவுருவம். ஆறுமுகங்களும், பன்னிரெண்டு கரங்களும் கொண்ட அழகிய திருமேனி. விபூதிக் காப்பு அலங்காரத்தில் பார்க்க பரவசமும் ஆனந்தமும் கிடைக்கின்றது.

மூலஸ்தானத்தின் மூலவர் கைலாச நாதர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார். அம்பிகை அகிலாண்டேஸ்வரி கருணையே உருவாக எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். பல குடும்பங்களுக்கு குல தெய்வமாக விளங்கும் இவள் வரப்பிரசாதி எனப் போற்றுகின்றனர்.

ராஜ கணபதி, சிவாலய பரிவாரத் தெய்வங்கள், நவக்கிரகங்கள் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...