அருள்மிகு கழுமலையம்மன் திருக்கோவில் (சீர்காழி)

Primary Deity
-
Temple Type
Amman Temples
Location
மயிலாடுதுறை
Contact Number
+91-Not Available

பீடைகளான தீவினைகளைப் போக்கும் பீடைஹாரி என்பதையே காலப்போக்கில் மருவி பிடாரி என்கின்றனர். இவ்வூரிலுள்ள கழுமலைக் கால்வாயில், வேகமாக ஓடி வரும் நீரில் அடித்து வரப்பட்ட சிலையை, ஊர் மக்கள் கண்டெடுத்து, பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். இங்கு ஆதியில் குடியிருந்த சப்த கன்னிகைகளை இடம் பெயரச் செய்தவள் இந்த பிடாரி. சித்திரை மாதத்தில் வரும் அமாவாசையன்று காப்பு கட்டி 10 நாட்களுக்கு விழா நடத்துவார்கள். காப்பு கட்டும் நாளன்று, இந்த ஆலயத்து எல்லைக்குட்பட்ட வீடுகளில் கர்ப்பிணிகள் தங்குவதில்லை. காப்பு கட்டிய நாள் முதல் 7 பேரைக் கொண்ட குழு ஒன்று, ஆலயத்தைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும், கைகளில் ஆயுதங்களும், உணவுப் பொருட்களும் ஏந்தி ஊர்வலம் போவார்களாம்.

சிறிய மண்டபத்தினுள்ளே உள்ள பிரதான கருவறையில் வடக்கு திசை நோக்கி அமர்ந்திருக்கின்றாள் மூலவரான பிடாரி எனப்படும் கழுமலையம்மன். இவள் மிகுந்த சக்தி வாய்ந்த வரப்பிரசாதி என்பர். இவளைப் பார்த்தபடி தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளாள் வேதாளத்தம்மன். சுற்று வட்டாரக் குடும்பங்களுக்கு குலதெய்வமாக இருந்து அருள்பாலிக்கின்றாள். பிள்ளையார், அசுவத்தாமன், வல்லப கணபதி, சண்டிகேஸ்வரி ஆகியோரின் திருவுருவங்களையும் தரிசிக்கலாம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...