பிரம்மாவின் புத்திரனான கர்த்தம ப்ரஜாபதி, மோட்சம் கிடைக்க வேண்டி, இத்தலத்தில் திருமாலைக் குறித்து தவம் மேற்கொண்டார். திருமால் அருள் புரிவதில் தாமதம் காட்டினார். இதனால் கோபம் கொண்ட திருமகள், பக்தன் மீது கொண்ட பரிவால், வைகுண்டத்தை விடுத்து, இத்தலத்திற்கு வந்து இங்குள்ள பொய்கையின் தாமரை மலரில் தன்னை மறைத்துக் கொண்டாள்.
திருமகளைத் தேடி பூலோகம் வந்த திருமால், இங்குள்ள பொய்கையிலுள்ள எல்லாத் தாமரைகளும் மொட்டுகளாக இருக்கக் கண்டார். தனது வலது கண்ணை மூடி இடது கண்ணைத் திறந்தார். சந்திரோதயம் என நினைத்து மலர்கள் மலர்ந்தன. ஒரே ஒரு தாமரை மட்டும் மொட்டாகவே இருந்தது. அதற்குள் ஒளிந்திருந்த லக்ஷ்மியைக் கண்டுபிடித்து, ஸ்ரீயை ஆலிங்கனம் செய்து கொண்டார் திருமால் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
திருமங்கை ஆழ்வாரின் அவதார ஸ்தலம் இது.
நாங்கூர் பஞ்ச நரசிம்ம க்ஷேத்ரங்களுள் இதுவும் இரண்டு.