அருள்மிகு கல்யாண ரங்கநாதர் திருக்கோவில்

Primary Deity
கல்யாண ரங்கநாதர்
Temple Type
ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவில்
Location
மதுரை
Contact Number
+91-Not Available

800 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான இவ்வாலயத்தில் எம்பெருமானுக்கு நித்ய திருவாராதனம் மற்றும் உற்சவங்களை சிறப்புற செய்து வருகின்றனர். திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாளின் அபிமான ஸ்தலம் என்பர். பரிவேட்டை உற்சவத்தின்போது நித்ய கல்யாணப் பெருமாள் இங்கே எழுந்தருளுகின்றார். ஸ்ரீ ரங்கநாயகி ஸமேத ஸ்ரீ கல்யாண ரங்கநாதப் பெருமாள் சந்நிதிக்கு இராஜகோபுரத்தை நிர்மாணம் செய்யும் பணிகளை துவக்கியுள்ளனர் - கல்யாண ரங்கநாதர் கைங்கர்ய ட்ரஸ்ட் எனும் அமைப்பினர். பெருமாளின் அனுக்ரஹத்துடனும், ட்ரஸ்ட்டின் இடைவிடாத பணிகளினாலும், சேவார்த்திகளுக்கு விரைவில் ராஜகோபுர தரிசனம் கிடைக்கவிருக்கிறது. மறுபடியும் ஸம்ப்ரோக்ஷணாதிகளை செய்யவிருக்கிறார்கள்.

மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ கல்யாண ரங்கநாதர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். சங்கு - சக்கரம் ஏந்திய மேற்கரங்கள், அபய - வரத ஹஸ்தங்கள் கொண்ட கீழ்க்கரங்கள் கொண்ட சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். மூலவர்க்கு ஒப்பான அழகான திருமேனியுடன் உற்சவ ரங்கநாதர் ஸ்ரீ தேவி - பூதேவி சஹிதம் சேவை சாதிக்கின்றார். மூலஸ்தானத்திற்கு வெளியே ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். எதிரே பெரிய திருவடி காட்சி தருகிறார். பொதுவாக ரங்கநாதரை பள்ளிக் கொண்ட ரங்கநாதராக சயனக் கோலத்தில் சேவித்திருக்கும் சேவார்த்திகளுக்கு, இங்கு நின்ற கோலத்தில் சேவை சாதிப்பது விசேஷமான சிறப்பாகும். திருமணக் கோலத்தில் சேவை சாதிப்பதால், கிடந்த நிலையில் இல்லாமல், நின்ற நிலையில் சேவை சாதிப்பதாக ஐதீகம். தாயார் ரங்கநாயகி தனிக் கோவில் நாச்சியாராக எழுந்தருளியுள்ளார். மிகுந்த வரப்ரசாதி என்பர். ஆழ்வாராதிகள், விஷ்வக்சேனர், சிறிய திருவடி, ஆண்டாள், காளிங்கநர்த்தன கிருஷ்ணன் ஆகியோர் மண்டபத்தின் இடதுபுறமாக இடம் பெற்றுள்ளனர். மற்றைய உற்சவ மூர்த்திகளாக எழுந்தருளியுள்ள ஸ்ரீ தேவி - பூதேவி சமேதரான வரதராஜப் பெருமாள், யோக நரசிம்மர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள் ஆகியோரை சேவிக்கலாம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...