ஸ்தல வரலாறு:
ஜாதிக்காய் மூட்டைகளை வண்டியில் ஏற்றிக் கொண்டு வந்த வணிகன் ஒருவன், இக்குளக்கரை அருகே வண்டியை நிறுத்தி இளைப்பாறலானான். அவனை சோதிக்க எண்ணிய விநாயகர், சிறுவன் வடிவம் கொண்டு அவனிடம் போய் மூட்டைகளில் என்ன இருக்கிறது என வினவினார். கடுக்காய் மூட்டைகள் என பொய்யுரைத்தான் வணிகன்.
சந்தைக்குப் போய் மூட்டைகளை பிரித்துப் பார்த்ததில் ஜாதிக்காய்கள் அனைத்தும் கடுக்காய்களாக மாறி இருந்தன. இதைக் கண்டு பயந்த வணிகன் தனது பிழையை பொறுத்தருளுமாறு வேண்டினான். விநாயகரை மனமுருக வேண்டியதால் அவைகள் மீண்டும் ஜாதிக்காய்களாக மாறின என தல வரலாறு கூறுகிறது.
இதனால் இவ்விநாயகரை கடுக்காய் விநாயகர் என அழைக்கின்றனர்.