இத்தலத்தில் சிவபெருமான் நெருப்பாக மாறி பண்டன் என்னும் அசுரனை வதம் செய்ததாக ஐதீகம். மேற்கு திசையில் உள்ள 16 கால் மண்டபத்தில் சிவபெருமானின் அடிமுடி தேடிய விஷ்ணு, பிரம்மா ஆகியோரின் தோற்றங்களை வராஹம், அன்னப்பறவையுடன் வரைந்துள்ளனர். தேவர்களை சமிதையாகக் கொண்டு சிவபெருமான் இங்கு யாகம் செய்ததாக ஐதீகம். இது தேவார வைப்புத்தலம், பஞ்ச மயானங்களுள் ஒன்று. பஞ்ச மயானங்கள்: 1. கச்சி மயானம் - காஞ்சிபுரம், 2. காழி மயானம் - சீர்காழி, 3. வீழி மயானம் - திருவீழிமழலை, 4. நாலூர் மயானம் - நாலூர் (கும்பகோணம்), 5. கடவு+ர் மயானம் - திருக்கடவூர்.
அருள்மிகு கச்சி மயானேஸ்வரர் திருக்கோவில் (காஞ்சி)
Primary Deity
கச்சி மயானேஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் மூலவராக கச்சி மயானேஸ்வரர் எழுந்தருளி அருள் புரிகின்றார். இவருக்கு மயான லிங்கேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. கோஷ்ட மூர்த்தங்களான பிரம்மா, துர்க்கை, லிங்கோத்பவர் ஆகிய மூர்த்தங்களும் விநாயகரும் அழகாக உள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.