இவ்வூருக்கு வந்திருந்த வணிகன் ஒருவன், இரவில் பேரொளியுடன் தோன்றிய சிவலிங்கத்தையும் அதை தேவர்கள் பூஜிப்பதையும் கண்டான். மறுநாள் இந்த நிகழ்வைப் பற்றி பராந்தக சோழனிடம் தெரிவித்தான். பராந்தக சோழனும் அவரது விருந்தினரான குலசேகர பாண்டியனும் இந்த நிகழ்வு நடந்த அரச மருகே வந்து பார்த்தனர். அப்படி எதுவும் நடந்ததற்கான அறிகுறிகள் ஏதும் அங்கு தெரியவில்லை.
அப்போது அங்கு வந்த வயோதிகர் ஒருவர் அவர்களை அழைத்துச் சென்று லிங்கத்தைக் காண்பித்து விட்டு, அருகிலிருந்த குன்றின் மேல் நின்று கொண்டு, கையில் கரும்புடன் முருகனாக காட்சி தந்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. இதனால் மகிழ்ந்த குலசேகர பாண்டியன், ஊருக்குள் சிவாலயத்தையும் குன்றின் மீது முருகன் கோவிலையும் கட்டியதாக வரலாறு.
நித்ய பூஜைகளையும், உற்சவங்களையும் சிறப்புற நடத்துகின்றனர்.