கடலில் மிதந்து வந்த சூலாயுதத்தை கண்ணுற்ற சேதுபதி ராஜா அதை சிப்பாயை விட்டு எடுத்து வரச் செய்து கடம்பாக்குடி ஊர் எல்லையில் ஊன்றி விட்டார். பின்னர் அதைச் சுற்றி கோவில் எழுப்ப முற்பட்டபோது, 'கட்டிட கோபுரங்கள் வேண்டாம்... ஓலைக் குடிசையே போதும்' என கனவில் வந்து கூறியதால், உலகம்மாளுக்குப் பிடித்த பனை ஓலையினால் தாழ்வாரக் குடிசை போட்டுள்ளனர்.
ஆவணித் திருவிழா காப்பு கட்டும்போது, பூசாரி தனது கண்களையும் வாயையும் கட்டிக்கொண்டு பானைக்குள் கையை விட்டு சர்ப்பத்தை எடுத்து ஓலைக் குழலுக்குள் விடுவார். பிறகு காப்பு கட்டும் விழா நடைபெறும்.