அருள்மிகு உன்னதபுரீஸ்வரர் திருக் கோவில் (மெலட்டூர்)

Primary Deity
உன்னதபுரீஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
Contact Number
+91-Not Available

ஊருக்கு வெளியே அரை கி.மி தூரத்தில் வெட்டாறு ஓடுகிறது. நான்கு பக்கங்களிலும் பசுமையான வயல்கள், நீர் நிலைகள், கோவில்கள் நிறைந்த அழகிய கிராமம். ஸ்ரீராமர் அணிலின் முதுகில் மூன்று கோடுகள் போட்டது போல் மூன்று அக்ரஹாரத் தெருக்கள் கொண்ட கிராமம்.

16ம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள், 500 ப்ராம்மணர்களுக்கு தானமாக வழங்கிய கிராமம் எனக் கூறப்படுகிறது. இயல், இசை, நாடக பயிற்சி செய்வதற்காக வழங்கப்பட்டதாம்.

மெலட்டூரில் நடக்கும் பாகவத மேளா மிகவும் பிரபலமானது. தியாகராஜ ஸ்வாமிகள் காலத்து வெங்கடராம சாஸ்திரிகள் உருவாக்கிய நாட்டிய நாடகம் - ஒரு வாரம் வரை நடத்துகின்றனர்.

ப்ரஹ்லாத சரித்திரம், நரசிம்ம ஜெயந்தி, வெங்கடரமண மகாத்மியம், ருக்மணி கல்யாணம் ஆகிய நாட்டிய நாடகங்கள் மிகவும் பிரபலமானவை.

மூலவர்: உன்னதபுரீஸ்வரர், அம்பாள்: சிவப்ரியை

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் உன்னதபுரீஸ்வரர். லிங்க மூர்த்தம் சற்று சாய்வாக உள்ளது. ஆவுடையார் பிறகு சேர்க்கப்பட்டதாக சிவாச்சார்யார் தெரிவிக்கின்றார். காட்டாற்று வெள்ளத்தில் மிதந்து இவ்வூர் வந்து சேர்ந்த லிங்கம் என்பதால் மிதந்தீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.

அம்பாள் சிவப்ரியை தனி சந்நிதி கொண்டுள்ளார்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...