ஸ்ரீ ராமானந்தேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தனது 90வது வயதிலும் சுறுசுறுப்பாக இருந்தவர். கோவிலின் பின்புறமாக பெரிய பள்ளம் ஒன்றை தோண்டி, தனது சமாதிக்கு வேண்டிய இடத்தை தானே தயார் செய்து கொண்டவர். அதில் போட வேண்டிய திரவியங்கள், மூட வேண்டிய கற்பலகை - இவற்றைக் கூடத் தானே தயார் நிலையில் வைத்திருந்தார். பின்னர் அதே இடத்தில் சமாதியானார் என்று கூறுவர்.
அருள்மிகு உச்சிஷ்ட கணபதி திருக்கோவில் (தஞ்சாவூர்)
Primary Deity
உச்சிஷ்ட கணபதி
Temple Type
Vinayagar Temples
Location
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் மூலவராக உச்சிஷ்ட கணபதி எழுந்தருளி அருள் புரிகின்றார். இந்தியாவில் உச்சிஷ்ட கணபதிக்குத் தனிக் கோவில் இருப்பது இங்கு மட்டுமே. ஸ்ரீ ராமானந்தேந்திர ஸ்வாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்ட மூர்த்தம். சக்தி கணபதி என்பதன் மற்றொரு அமைப்பே உச்சிஷ்ட கணபதி ஆகும். இந்த கணபதியின் உபாசனையை ஸ்ரீ வித்யா உபாசகர்கள் நன்கு அறிவார்கள். இவருக்குரிய மந்திரங்கள் சக்தி வாய்ந்தவை. பால கணபதி, சப்த மாதர்கள் ஆகிய திருவுருவங்களையும் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.