அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக் கோவில் (கூகூர்)

Primary Deity
ஆம்ரவனேஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
Contact Number
+91-Not Available

பஞ்ச பாண்டவர்கள் திரௌபதியுடன் இவ்வூருக்கு வந்தபோது, 12 வருடங்களுக்கு ஒரு முறை காய்க்கும் மாங்கனி ஒன்றைக் கண்டனர். அதை பறித்து தரும்படி திரௌபதி வேண்டினாள். பீமன் அக்கனியை பறித்து திரௌபதியிடம் கொடுத்தான். அந்தக் கனி துர்வாசருக்குரியது என்பதை அறிந்து கொண்டதும் மிகவும் மனம் வருந்தி செய்வதறியாது திகைத்து, கண்ணனை அழைத்தனர்.

பறித்த மாங்கனியை திரும்பவும் மரத்திலேயே பொருத்தச் செய்தார் பகவான் கிருஷ்ணர் என ஸ்தல வரலாறு. துர்வாசரின் சாபத்திலிருந்து தப்பித்தனர் பாண்டவர்கள்.

தேவார வைப்புத்தலம்.

மூலவர்: ஆம்ரவனேஸ்வரர், அம்பாள்: மங்கள நாயகி.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஆம்ரவனேஸ்வரர். உயரமான பாணம் கொண்ட அழகிய திருமேனியுடன் ருத்ராட்ச பந்தலின் கீழ் ஏகாந்த தரிசனம் தருகின்றார்.

தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் மங்களாம்பிகை எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். ஐந்தடி உயரமும் சதுர்புஜங்களும் கொண்ட அழகிய திருவுருவம். சற்றே முன்பக்கம் சாய்ந்த நிலையில் காட்சி தருகின்றாள்.

பிரகார வலச்சுற்றில் பிள்ளையார், நடராஜப்பெருமான், அஷ்டதசபுஜ விஷ்ணு துர்க்கை, முருகன், கங்காள மூர்த்தி, பெரியாண்டவர், பெரிய ஆகிருதியுடன் கூடிய பைரவர், பூதகணங்கள், காரைக்கால் அம்மையார், அர்ஜுனன் ஆகியோரின் திருவுருவங்களைக் காணலாம். பதினாறு கால் மண்டபத்தில் வள்ளி - தெய்வயானை உடனாய முருகப் பெருமான், சம்பந்தர், அர்ஜுனன் ஆகிய சிலா வடிவங்களைக் காணலாம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...