தாயை இழந்துவிட்ட ஒரு குட்டி மான், தாயை இழந்ததுகூடத் தெரியாமல் சுற்றித் திரிந்தது. இறைவன் மான் வடிவம் கொண்டு அதற்கு தாயாக நின்று ஆதரவு தந்தார். இதனால் இத்தலம் மாந்துறை எனப் பெயர் கொண்டது.
கௌதமரிடமிருந்து பெற்ற சாபம் நீங்க இந்திரனும், புத்ர பாக்யம் வேண்டி ம்ருகண்டு முனிவரும், கண்வ முனிவரும், சூரிய - சந்திரர்களும், சமுத்ரராஜனும், சூரியனின் மனைவியும் வழிபட்ட ஸ்தலம் இது. பிரம்மா தனது பாவம் தீர வழிபட்ட ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. துன்பங்களை போக்கும் ஸ்தலம் என்பதால் அகாபஹரி என்றும் அழைப்பார்கள்.
இங்குள்ள ஆலமரத்தடி மண்ணை திருநீற்றுடன் சேர்த்து பிரசாதமாக வழங்குகின்றனர்.
இது ஒரு தேவாரத் திருத்தலம்.