சித்ரகுப்தனுக்கு 12 வயதில் உயிர் பிரியும் விதி இருந்தது. சித்ரகுப்தனைப் பிடிக்க எமன் வந்தபோது, எமனைத் தடுத்து, சித்ரகுப்தனைக் காப்பாற்றி, என்றும் 12 வயதாகவே இருக்கும்படி அருளி, அவனை எமனுக்குக் கணக்குப் பிள்ளையாக வைத்துக் கொள்ளும்படி அருளிய ஸ்தலம்.
அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோவில் (பரங்கிப்பேட்டை)
மூலவர்: ஆதிமூலேஸ்வரர், அம்பாள்: அமிர்தவல்லி
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார் ஆதிமூலேஸ்வரர். உயரமான பாணம் கொண்டு கம்பீரமாக தரிசனம் தரும் அழகிய லிங்கம். நாகாபரணம் சாத்தப்பட்டுள்ளது.
அமிர்தவல்லி அம்பாள் தனி சந்நிதி கொண்டுள்ளார். சிலையின் கீழ் ஸ்ரீ சக்கரம் இருக்கின்றது.
சித்திரை மாதம் முதல் ஏழு நாட்கள் சூரியனின் ஒளிக்கதிர்கள் சுவாமி மீதும் அம்பாள் மீதும் படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன.
பிரகார வலச்சுற்றில் சக்தி விநாயகர், முருகன், கடம்பன், பாதாள லிங்கம், கால பைரவர், சூரியன், இராமலிங்க சுவாமி மற்றும் காசி விஸ்வநாதரை தரிசிக்கலாம். திருநள்ளாறு போலவே கோவில் முகப்பில் சனீஸ்வரர் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். அம்பாள் சந்நிதி எதிரே சித்ரகுப்தர் சந்நிதி உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.