திருக்கடையூர் சென்று அமிர்தகடேசரை தரிசிக்கப் போவதாகப் புறப்பட்ட அகஸ்தியர், இயற்கையின் சீற்றம் காரணமாக நினைத்தபடி போக முடியவில்லை என வருந்தி,
ரிஷபாரூடராய் அர்க்கீஸ்வர பெருமானாகவும், அம்பாள் அமிர்தாம்பிகையுடனும், அகஸ்தியருக்கு இறைவன் காட்சி தந்தார்.
'அர்க்கலம்' என்றால் தடையை நீக்கிய எனப் பொருள். தடையை நீக்கிய அர்க்கீஸ்வரர் எனப் பெயர் கொண்டார் எனத் தல வரலாறு கூறுகிறது.
'அர்க்கன்' என்றால் சூரியன். சூரியன் வழிபட்ட இறைவன் என்பதால் இப்பெயரைக் கொண்டதாகவும் கூறுவர்.