பாற்கடலிலிருந்து கடைந்து கிடைக்கப்பெற்ற அமிர்தத்தை தேவர்கள் இத்தலத்தில் ஸ்தாபித்தனர். திருமால் அதை பங்கிட்டு கொடுக்க முனைந்தபோது, அந்த அமிர்தமே (கடமே) லிங்கமாக மாறியது கண்ட திருமால், தனது ஆபரணங்களை கழற்றி பீடத்தில் வைத்து, அம்பிகையாக பாவித்து பூஜித்தார். அபிராமியன்னை ப்ரத்யட்சமாகி அமிர்தம் கிடைக்கப் பெற அருளினார். இந்த நிகழ்வு நடந்த ஸ்தலம். அப்போது வந்த திருமாலே இங்கு சேவை சாதிக்கின்றார்.
அமிர்த சக்திகளை பகிர்ந்து அளித்த இத்தலத்தில் தோன்றியதுதான் - பஞ்சாங்கத்தில் நாம் காணும் அமிர்த நேரம் எனக் குறிப்பொன்று கூறுகின்றது.