பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் கூடுமிடம் திருமுக்கூடல் எனப்படுகின்றது.
திருப்பதிக்கு போய் ஸ்ரீ நிவாசப் பெருமாளை சேவிக்க ஆயத்தமான தொண்டைமான் சக்ரவர்த்தியை, போர் ஒன்று வர இருப்பதாக தெரிவித்து காஞ்சியிலேயே இருக்குமாறு தெரிவித்தார் பெருமாள். திருப்பதியிலிருந்து சங்கு-சக்கரம் அனுப்பி வைத்தார். போரில் வென்றான் சக்ரவர்த்தி. பின்னர் அவனை பழைய சீவரம் போகுமாறு பணித்தார்.
சயனக் கோலத்தில் இருந்த பெருமாள், தொண்டைமான் சக்ரவர்த்திக்கு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதித்தார். உணர்ச்சி வசப்பட்ட மன்னன் "அப்பா வெங்கடேசா" என்று கூவினான். அந்த பெயரே இன்றளவும் நிலைத்து விட்டது என்பர்.
திருமாலை குறிக்க சங்கு, சக்கரம் கொண்டும், சிவபெருமானை குறிக்க ஜடாமுடி கொண்டும், பிரம்மனைக் குறிக்க முன் கையில் தாமரை மலர் கொண்டும் திருமுக்கூடல் வெங்கடேசர் மும்மூர்த்திகளின் ஐக்கிய கோலத்தில் தரிசனம் தருகின்றார்.
காணும் பொங்கலன்று காஞ்சி வரதராஜப் பெருமாளின் பார்வேட்டை உற்சவம் பிரசித்தம். காஞ்சிபுரத்திலிருந்து பழைய சீவரம் வந்த வரதராஜருடன் சீவரப்பெருமாளான நரசிம்மரும் சேர்ந்து கொண்டு திருமுக்கூடல் வந்து மூன்று பெருமாள்களும் சேவார்த்திகளுக்கு சேவை சாதிக்கின்றனர்.
சாலவாக்கம் ஸ்ரீநிவாசப் பெருமாள், காவந்த கண்டம் பெருமாள், பொற்பந்தல் வெங்கடேசர், மலைவையாவுர் பெருமாள் அனைவரும் (தை மாதம்) மாட்டுப் பொங்கல் பெருவிழாவன்று இங்கு கூடுகின்றனர்.