அருள்மிகு அனுவாவி சுப்ரமணியர் திருக்கோவில் (பெரிய தடாகம்)

Primary Deity
ஸ்ரீ கல்யாண சுப்ரமணியர்
Temple Type
திருக்கழுக்குன்றம் கோவில்
Location
வேலூர்
Contact Number
+91-Not Available

மிருத சஞ்சீவினி, விஷால்ய காரணி, ஸ்வர்ண காரணி, சந்தனி போன்ற மூலிகைகளைத் தேடி தென்திசை வந்த ஹனுமன், தாகத்தைத் தீர்த்துக்கொள்ள இவ்வூரிலுள்ள மலையில் இறங்கினார். எங்கு தேடியும் தண்ணீர் கிடைக்காததால் முருகப் பெருமானை தியானித்தார். முருகப் பெருமான் தனது வேலாயுதத்தால் பூமியைத் துளையிட்டு தீர்த்தம் உண்டாக்கிக் கொடுத்தார். ஹனுமனின் தாகம் தீர்ந்தது. வாவி என்றால் நீரோடை அல்லது ஊற்று என்று பொருள். ஹனுமனுக்காக உருவானதால் ஹனு - வாவி - ஸ்ரீ ஹனுவாவி என அழைக்கப்பட்டு, நாளடைவில் மருவி அனுவாவி என்றானதாக ஸ்தல வரலாறு. இப்படி முருகனால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் இன்றும் வற்றாது, வருடம் முழுவதும் வந்துகொண்டிருக்கின்றது. இந்த சுனை நீரை தொட்டியில் தேக்கி வைத்து, குழாய் வழியே மலையடிவாரத்திற்குக் கொண்டு சென்று பெரிய தடாகம் கிராமத்திற்குத் தண்ணீர் வசதி செய்து தரப்படுகிறது.

200 அடி உயரம் கொண்ட இந்த மலையை 423 படிக்கட்டுகள் வழி ஏறி உச்சிக்குச் செல்ல வேண்டும். மலை ஏறும் வழியில் சந்நிதி கொண்டுள்ள இடும்பனை தரிசித்துவிட்டு, முன் மண்டபத்திற்குச் சென்றால் வள்ளி - தெய்வயானை உடனாய சுப்ரமணிய சுவாமி, விநாயகர் மற்றும் வீரபாகு ஆகிய மூர்த்திகளை தரிசிக்கலாம். மகாமண்டபத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் வடக்கு பார்த்து எழுந்தருளி தரிசனம் தருகின்றார். மலை உச்சியிலுள்ள மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ கல்யாண சுப்ரமணியர் எழுந்தருளியுள்ளார். சக்தி ஆயுதம் - வஜ்ராயுதம், அபய - வரத ஹஸ்தங்கள் கொண்ட சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. சுயம்பு வடிவம். வள்ளி - தெய்வயானை தேவியர்கள் உடன் உள்ளனர்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...