அருள்மிகு அனந்தீஸ்வரர் திருக்கோவில், சிதம்பரம்

Primary Deity
அனந்தீஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
கடலூர்
Contact Number
+91-Not Available

தில்லை நடராஜரின் நடனத்தைக் காண வேண்டி பூலோகம் வந்த ஆதிசேஷனாகிய அனந்தன், அத்ரி-அனுசுயா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்து பதஞ்சலி எனும் பெயரில் வளர்ந்து, தில்லை வனத்தில் தங்கி, தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி, சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டுவந்தார். பதஞ்சலி தீர்த்தம் கோவிலுக்குள் நுழைந்ததும் பார்க்கலாம். திருமூலட்டநாதர் கோவிலுக்கு அர்த்தஜாம பூஜையை காணவரும் ரிஷிகளும், மகான்களும் இவ்விறைவனை உச்சிப்பொழுதில் தரிசிக்கின்றனராம்.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக அனந்தீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். அனந்தன் எனப்படும் ஆதிசேஷன் வழிபட்டதால் அனந்தீஸ்வரர் எனப் பெயர் கொண்டார். இவரை உச்சிக் காலத்தில் தரிசிப்பது விசேஷம். சிவாலய கோஷ்டத்தில் வல்லபை கணபதி, பிரம்மா, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் ஆகிய மூர்த்தங்களையும், பிரகார வலச் சுற்றில் கணபதி, வள்ளி-தெய்வயானை உடனாய முருகன், பைரவர், சனீஸ்வரர், நவகிரகங்கள், அஷ்டபுஜ துர்க்கை ஆகிய மூர்த்தங்களையும் தரிசிக்கலாம். மண்டப தூண்களிலுள்ள சிற்பங்கள் அனைத்தும் அற்புதமாக உள்ளன. குறிப்பாக யோக நிலைகொண்ட பதஞ்சலியின் சிற்பம் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பதஞ்சலி மகரிஷி தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். நாகதோஷத்திலிருந்து விடுபட இவரை வழிபடுகின்றனர். பிரகாரத்தில் அருகருகே எழுந்தருளி தரிசனம் தரும் சூரிய-சந்திரர்கள் விசேஷ மூர்த்திகளாவர். பித்ருக்களுக்கு செய்யவேண்டிய தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் விடுபட்டிருந்தால், இவர்களை வழிபட்டு தோஷ நிவர்த்தி அடையலாம். பதஞ்சலி தீர்த்தம் கோவிலுக்குள் நுழைந்ததும் பார்க்கலாம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...