அருள்மிகு அட்சயநாத ஸ்வாமி திருக்கோவில் (தென்கரை மாந்துறை)

Primary Deity
அட்சயநாத ஸ்வாமி
Temple Type
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Location
தூத்துக்குடி
Contact Number
+91-Not Available

சிவபெருமானை அழைக்காது தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்டதற்காக சந்திரன் சாபம் பெற்றான். சாபத்தினால் பெற்ற க்ஷயரோக நோயை குணப்படுத்திக் கொள்ள வேண்டி, இத்தலம் வந்து இவ்விறைவனை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றான். அ-க்ஷயம் என்றால் க்ஷயம் நீங்குதல். இதனால் இவ்விறைவன் அட்சயநாத ஸ்வாமி என அழைக்கப்படுகிறார். தனது கிரணங்கள் வலிமையாக இருக்க சூரியனும் இவ்விறைவனை வழிபட்டுள்ளதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.

கடக ராசியைச் சேர்ந்தவர்களும் திருவோணம் - ரோகிணி நட்சத்திரக்காரர்களும் வழிபட வேண்டிய ஸ்தலம் இது. சந்திரன் நீச்சம் அல்லது உச்சம் பெற்றவர்கள், சந்திரன் உச்சமாயிருக்கும் ரிஷப ராசிக்காரர்கள், சந்திரன் நீச்சமாயிருக்கும் விருச்சிக ராசிக்காரர்கள் பரிகாரம் தேடிக் கொள்ள வேண்டிய ஸ்தலம் என சிவாச்சாரியார் தெரிவிக்கின்றார். வெள்ளை வஸ்திரம் மற்றும் பச்சரிசியை மூன்று திங்களுக்கு தானமாக கொடுத்து திரிசதி படித்து வந்தால் பரிகாரம் தேடிக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

தேவார வைப்புத்தலம்.

மூலவர்: அட்சயநாத ஸ்வாமி, அம்பாள்: யோக நாயகி.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் அட்சயநாத ஸ்வாமி. சதுர பீட ஆவுடையாருடன் கூடிய அழகான திருமேனி. அம்பாள் யோக நாயகி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். நிருதி மூலையில் உச்சிஷ்ட கணபதியை தரிசிக்கலாம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...