ஸ்ரீ கிருஷ்ண பகவான் புத்ர பாக்யம் வேண்டி இவ்விறைவனை வழிபட்டுள்ளார். பூஜிக்க புஷ்பங்கள் கிடைக்கவில்லையென ஆல இலைகளைக் கொண்டு அர்ச்சித்தார். பிரத்யும்னன் எனும் புத்ரனை பெற்றதாக ஸ்தல வரலாறு.
ஸ்ரீகரிஷி எனும் முனிவர்க்கு பிரம்மா தந்த சாபத்திலிருந்து விமோசனம் கிடைத்த ஸ்தலம். பாண்டவர்கள் இவ்விறைவனை வழிபட்டு இழந்த ராஜ்யத்தைப் பெற்றனர். பாண்டவர்கள் வழிபட்டதால் இவ்வூர் ஐவர்பாடி என அழைக்கப்படலாயிற்று. அருகிலுள்ள பாண்டவபுரம் எனும் ஊரில் பாண்டவர்கள் தங்கி இருந்ததாக குறிப்பு ஒன்று கூறுகிறது. (பாண்டவபுரத்தின் தற்போதையப் பெயர் ஏனாதிமங்கலம்)